பொரளை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket truck) ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment