ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை : சட்டவிரோத வாகன விற்பனை தொடர்பில் கணவர் சிறையில் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 31, 2025

ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கு பிணை : சட்டவிரோத வாகன விற்பனை தொடர்பில் கணவர் சிறையில்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொசெல் மெலனி அபேகுணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (30) கைது செய்யப்பட்ட அவர், இன்றையதினம் (31) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தலா இரண்டு மில்லியன் ரூபா கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட வாகனத்தை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் குற்ச்சாட்டு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகள் தொடர்பாக, வலானா குற்றத் தடுப்புப் பிரிவில் நேற்று (31) தனது சட்டத்தரணி ஊடாக சரணடைந்த அவரிடம் 9 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர், ரோசெல் அபேகுணவர்தன கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக மத்துகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் அவரது கணவர் தனுஷ்க வீரக்கொடி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனுக்கு விற்பனை செய்த குறித்த வாகனம் சட்டவிரோதமாக பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த ஜீப் ரக வாகனத்தை கொள்வனவு செய்த ஜகத் விதானவின் மகன் ரசிக விதான கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி மத்துகம நீதிமன்றில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிர்வரும் நாளை (01) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்ட வாகனம் தொடர்பான பல்வேறு சம்பவங்களுடன் தனுஷ்க வீரக்கொடிக்கு தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் யால தேசிய பூங்காவில் வினோத ஜீப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்த சர்ச்சைக்குரிய சம்பவம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் அபாயகரமான வகையில் ஜீப் வண்டியை செலுத்திய சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment