விளக்கமறியலில் இருந்த முன்னாள் அமைச்சருக்கு பிணை : கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 14, 2025

விளக்கமறியலில் இருந்த முன்னாள் அமைச்சருக்கு பிணை : கடுமையான நிபந்தனைகளுடன் விடுவிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளவத்தை சொகுசுமாடி குடியிருப்பு தொகுதியில் தங்கமுலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டது.

துமிந்த திசாநாயக்க சமர்ப்பித்த பிணை மனுவை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேகநபரை 250,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீரப்பிணைகளில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டு பயணத்தடை விதித்த நீதிபதி, சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment