கந்தானை பொலிஸ் நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி, மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளர் காயம் - News View

About Us

About Us

Breaking

Thursday, July 3, 2025

கந்தானை பொலிஸ் நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி, மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளர் காயம்

கந்தானை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கந்தானை சந்தை பகுதியில் இன்று (03) காலை 10.00 மணியளவில், அடையாளம் தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கார் ஒன்றில் பயணித்தவர்களை T56 ரக துப்பாக்கி மூலம் மேற்கொண்ட சூட்டில் காயமடைந்த இருவரும் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலைியல் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவர் உபாலி அமுனுகொட குலவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த மற்றொரு நபர், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சமீர மனஹர என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

‘வெலி சமீர’ என அழைக்கப்படும் சமீர மனஹரவின் நிலை அபாயகரமல்லையென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரணமடைந்த உபாலி அமுனுவில, சமீர மனஹரின் உறவினர் என்றும், இருவரும் உடற்பயிற்சி நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பியபோது, அவர்களது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகியுள்ளனர்.

கொலை முயற்சிக்கான காரணம் இதுவரை உறுதியாகவில்லை என்பதோடு, கந்தானை பொலிஸாருடன் இணைந்து மேலும் பல பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment