கொஸ்கொட தூவ மோதறை பகுதியில் இன்று (31) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில், 24 வயதான திருமணமாகாத அருண் மெண்டிஸ் எனும் நபர், தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர், கரையோரப் பகுதியில் அமைந்துள்ள ஆமைகள் கண்காட்சி நிலையத்தின் உரிமையாளர் என்றும் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் கடல் பக்கமாக குறித்த வீட்டுக்குள் புகுந்து, அவரை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் பயணித்ததாக தெரிவிக்கப்படும் மோட்டார் சைக்கிளொன்று, கொழும்பு - காலி, இந்துருவ அதுருவெல்ல பாலத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
காலி அம்பலங்கொட அநுராத
No comments:
Post a Comment