நேருக்குநேர் மோதிய பஸ்கள் : 21 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 21, 2025

நேருக்குநேர் மோதிய பஸ்கள் : 21 பேர் காயம்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸுடன், தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பஸ், கேகாலையில் இருந்து இரத்தினபுரி ​நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுடன் இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 21 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், இவர்கள் அனைவரும் கேகாலை மற்றும் வரகாபொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment