அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் : 17 வயது சிறுவன் பலி - News View

About Us

About Us

Breaking

Friday, July 4, 2025

அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் : 17 வயது சிறுவன் பலி

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி கரையோரப் பாதையில் இன்று (04) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சாலையை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதியதில், 17 வயதான பி. முஹம்மது என்ற இளைஞர் உயிரிழந்தார்.

இன்று அதிகாலை காத்தான்குடி கடற்கரை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த சிறுவன் செலுத்திச் சென்ற மோடார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மின்சாரத் தூணுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

உயிரிழந்த சிறுவனின் சடலம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment