முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று (30) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இக்குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதவியேற்ற இரண்டாம் வருடத்தை நினைவுகூர, லக்ஷ்மன் யாபா அபேவர்தன முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக இருந்த காலத்தில், இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி பத்திரிகைகளில் விளம்பரங்கள் பிரசுரித்ததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 1.7 மில்லியனக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள குறித்த இருவருக்கும் எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment