சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP) 5 பேருக்கு இடமாற்றம் மற்றும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த இடமாற்றத்தின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். முத்துமால, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது இடத்திற் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை கீழே காணலாம்.
No comments:
Post a Comment