உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தின் ஒரு சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்ற அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றின் வியாக்கியானம் தொடர்பில், இன்று (26) தற்போது இடம்பெற்று வரும் பாராளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அறிவித்தார்.
அதற்கமைய, முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும், அவை தற்போதைய வடிவில் சட்டமாக்கப்பட விரும்பின் பாராளுமன்ற விசேட பெரும்பான்மையுடன் பொதுமக்கள் கருத்துக் கணிப்பும் அவசியம் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், உயர் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் அந்த பிரிவுகள் திருத்தப்பட்டால், அரசியலமைப்பு முரண்பாடுகள் ஏற்படாது எனவும் உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment