கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக முஹம்மது பைறூஸ் தெரிவானார் - News View

About Us

About Us

Breaking

Monday, June 16, 2025

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக முஹம்மது பைறூஸ் தெரிவானார்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு திங்கட்கிழமை (16) இடம்பெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

இதில், ஓட்டமாவடி -2 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எச்.எம். பைறூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதரவளித்து தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பிரதித் தவிசாளராக மாஞ்சோலை - பதுரியா நகர் வட்டாரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏ.எச்.நுபைர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி 8 ஆசனங்கள் ஆதரவுடன் காணப்படுவதுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 9 ஆசனங்கள் ஆதரவுடன் பிரதேச சபை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

No comments:

Post a Comment