மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வீதி 2ஆவது மைல்கல் பகுதியில் வேக கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது
இதில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் 15 வயது சிறுமி உயிரிழந்ததுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23) அதிகாலை 4.45 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி இரண்டாம் குறுக்கைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய், கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றி வளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக இன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டு. போதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




No comments:
Post a Comment