கைது செய்யப்பட்ட மிலான் ஜயதிலக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
காணி ஒன்றின் வரைபடத்தை (Plan) அங்கீகரிப்பதில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் முறைகேடு தொடர்பாக அவர் இன்று (19) முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார்.
தொம்பே பிரதேச சபையின் தலைவராக இருந்த காலப்பகுதியில் மேற்படி முறைகேடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் தற்போது மவ்பிம ஜனதா கட்சியின் கம்பஹா மாவட்ட பிரதான அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment