தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகம் - ஞானசார தேரர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 21, 2025

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகம் - ஞானசார தேரர்

ஏறாவூர் மசூதியொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

,சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுவது குறித்து சமீபத்தில் தான் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்தே மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன் என தெரிவித்துள்ள ஞானசார தேரர், நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மத பதற்றம் ஆபத்தான விதத்தில் அதிகரித்துள்ளதை இது வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

ஏறாவூரின் பாரம்பரிய முஸ்லீம் சமூகம் தீவிரவாத ஒடுக்குமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது, எனது உதவியை கோரியுள்ளது என தெரிவித்துள்ள ஞானசார தேரர், அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் மத்தியில் உள்ள தீவிரவாத சக்திகள் குறித்து தகவல்களை வழங்கியுள்ளதுடன் இவற்றை பகிரங்கப்படுத்துமாறு கோரியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

லிபியா கடாபி குழு என்ற குழுவினர் வட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளனர், தீவிரவாத கொள்கைகளை எதிர்க்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூரைச் சேர்ந்த நபர் ஒருவரின் பெயரை வெளியிட்டுள்ள ஞானசார தேரர், அவர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார், பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஏறாவூரில் நிலைமை கவலைக்குரியதாக உள்ளது. உள்ளுர் சுபி முஸ்லீம்கள் கடும் பாதுகாப்பிற்கு மத்தியிலேயே மசூதிக்கு செல்கின்றனர் என தெரிவித்துள்ள ஞானசார தேரர், ஏறாவூர் சுபி சங்கத்தின் செயலாளர் தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்ப்பவர் அவர் என்னை தொடர்புகொண்டு, அமைதியை விரும்பும் முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் குறித்து பேசினார் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment