ரமித் ரம்புக்வெல்லவை ஜூன் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (21) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகினார்.
“ஊழல் குற்றத்தைச் செய்ததாக” இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ள 3 முறைப்பாடுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று (20) உத்தரவிட்டார்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேகநபராகப் பெயரிடவும் நீதவான், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுமதி வழங்கினார்.
அதன்படி, வாக்குமூலத்தை வழங்குமாறு நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, சந்தேகநபர் ரமித் ரம்புக்வெல்ல இன்று (21)இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment