தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிட மூவரடங்கிய குழு - News View

About Us

About Us

Breaking

Friday, May 23, 2025

தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிட மூவரடங்கிய குழு

சபா பீடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகரவின் நடத்தை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கு மூவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேகர 2025ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி சபா பீடத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு, அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக குழுக்களின் பிரதித் தவிசாளரான (திருமதி) ஹேமாலி வீரசேகரவின் தலைமையில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

No comments:

Post a Comment