ஜனாதிபதி மிரட்டுகிறார் என்கிறார் சுமந்திரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

ஜனாதிபதி மிரட்டுகிறார் என்கிறார் சுமந்திரன்

தங்களிடம் மூன்றிலிரண்டு (2/3) பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் 60 வருட நிறைவையொட்டி புதன்கிழமை (14) விஹாரமகா தேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உரையாற்றியிருந்தார்.

இந்த உரை குறித்து தமிழ் அரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், பதில் பொதுச் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன், “தங்களிடம் முன்றிலிரண்டு ( 2/3 ) பெரும்பான்மை இருப்பதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகிறார்.

“அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும்.” யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று சொல்லும்போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment