செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 15, 2025

செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

அரியாலை - செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனிதச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் இன்று (15) முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி - சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித என்புச் சிதிலங்கள் அவதானிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில் நீதவான் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இதன்போது, மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஸ்கேன் ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று (15) அங்கு அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்றைய அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, மனித சிதிலங்கள் மீட்கப்பட்ட பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டன, தொடர்ந்து வரும் நாட்களில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment