அசைவ உணவகத்திற்கு எதிராக யாழ். நல்லூரில் வெடித்த போராட்டம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 21, 2025

அசைவ உணவகத்திற்கு எதிராக யாழ். நல்லூரில் வெடித்த போராட்டம்

நல்லூர் கந்தசுவாமி ஆலயச் சூழலில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக நேற்று (20) மாலை 4.30 மணியளவில் ஆரம்பித்த போராட்ட பேரணி யாழ். மாநகர சபை முன்பாக நிறைவடைந்தது.

இதன்போது யாழ். மாநகர சபைக்கு முன்பாக திறக்கப்பட்ட அசைவ கடைக்கு எதிராகவும் போராட்டக்காரர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் யாழ். மாநகர ஆணையாளரை சந்தித்து தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

குறித்த போராட்டத்தில் சைவ சமய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், சைவ சமய ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பிரபாகரன் டிலக்சன் - யாழ்ப்பாணம்

No comments:

Post a Comment