இந்த ஆண்டில் இதுவரை 19,215 டெங்கு நோயாளர்கள் பதிவு : 10 மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 11, 2025

இந்த ஆண்டில் இதுவரை 19,215 டெங்கு நோயாளர்கள் பதிவு : 10 மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள வலயங்களாக அடையாளம்

இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் மொத்தம் 19,215 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

அதன்படி ஜனவரி மாதத்தில் 4,936 பேரும், பெப்ரவரி மாதத்தில் 3,665 பேரும், மார்ச் மாதத்தில் 3,770 பேரும், ஏப்ரல் மாதத்தில் 5,175 பேரும் டெங்கு நோயாளிகளாக பதிவாகியுள்ளனர். மேலும், மே மாதத்தின் முதல் 10 நாட்களில் 1,669 டெங்கு நோயாளிகள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை 10 மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள டெங்கு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, திருகோணமலை, கண்டி, மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இருந்து அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment