வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய இன்று (07) பிற்பகல் 1.30 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான அவர், 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
No comments:
Post a Comment