மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 3, 2025

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பத்தரமுல்ல - பெலவத்த பகுதியில் மேர்வின் சில்வா சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதன்போது, மேர்வின் சில்வாவுடன் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சந்தேக நபர்களை இன்று (03) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

குறித்த வழக்குடன் தொடர்புடைய தற்போது தலைமறைவாக உள்ள பிரசன்ன ரணவீர உட்பட 3 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, இந்த வழக்கு தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை ஏப்ரல் 9 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment