தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முஸ்லிம் இளைஞரை கைது செய்தோம் - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, April 17, 2025

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவே முஸ்லிம் இளைஞரை கைது செய்தோம் - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

நாட்டின் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு நாம் பல நடவடிக்­கை­களை எடுத்­துள்ளோம். அந்­த­ வ­கை­யி­லேயே முஸ்லிம் இளைஞர் ஒரு­வரின் கைது இடம்­பெற்­றது. தேசிய மக்கள் சக்தி முஸ்லிம்­களை புறக்­க­ணிக்­க­வில்லை. நாட்டில் இன மத மொழி பேதமின்றி அனைத்து மக்­க­ளையும் சம­மாக நடத்தும் அரசாங்கமொன்றை நாம் தோற்­று­வித்­துள்ளோம். ஆனால் தோல்வி அடைந்த அர­சியல் கட்­சிகள் மீண்டும் மக்­களை பிள­வு­ப­டுத்த முயற்சிக்­கின்­றன என்று ஜனா­தி­பதி அநு­ர கு­மார திசா­நா­யக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்­தியின் ‘வெற்றி நமதே - ஊர் எமதே’ மக்கள் பேரணித்­ தொடர் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலைமையில் கடந்த வெள்­ளி­யன்று அக்­க­ரைப்­பற்றில் இடம்பெற்றது. இங்கு உரை­யாற்­றிய போதே ஜனா­தி­பதி மேற்கண்டவாறு குறிப்­பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய ஜனா­தி­பதி, கடந்த ஜனா­தி­பதி தேர்தல் மற்றும் பொதுத்­தேர்தல் இலங்கை வர­லாற்றில் விசேட தேர்தலாக அமைந்­தது. குறிப்­பாக இதற்கு முன்னர் நாட்டில் தேர்தல்கள் நடை­பெற்றபோது மக்கள் இன ரீதி­யா­கவும் மத ரீதியாகவும் பிள­வு­ப­டுத்­தப்­பட்டு வாக்­க­ளித்துக் கொண்­டி­ருந்­தார்கள். கிழக்கு மக்கள் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளுக்­கும் வடக்கு மக்கள் தமிழ் அர­சியல் கட்­சி­க­ளுக்கும் தெற்கு மக்கள் சிங்­கள அர­சியல் கட்சி­க­ளுக்கும் வாக்­க­ளித்­தார்கள்.

ஆனால் கடந்த பொதுத் தேர்­தலில் என்ன நடந்­தது? முழு நாடும் ஒன்று பட்­டது. வடக்கு, கிழக்கு, தெற்கு மக்கள் தேசிய மக்கள் சக்­திக்கு வாக்க­ளித்­தார்கள். அந்த தேர்தல் மூலம் மக்கள் ஒன்­று­பட்­டனர். ஆனால் தோல்வி அடைந்த அர­சியல் கட்­சிகள் மீண்டும் மக்­களை பிள­வு­ப­டுத்த முயற்­சிக்­கின்­றன. கடந்த காலங்­களில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் முஸ்லிம் மக்­களை புறக்­க­ணிப்­ப­தாக போலி­யான பிர­சாரங்­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

இந்த அர­சாங்கம் முஸ்லிம் மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்கவில்லை எனக் கூறு­கி­றது. ஆனால் நாம் நாட்டில் இன, மத, மொழி பேத­மின்றி அனைத்து மக்­க­ளையும் சம­மாக நடத்தும் அரசாங்­க­மொன்றை தோற்­று­வித்­துள்ளோம்.

இதற்கு முன்னர் இந்த நாட்டில் திகன, அக்­கு­றணை, அளுத்­கம போன்ற பிர­தே­சங்­களில் வன்­மு­றைகள் இடம்­பெற்­றன. மத வழிபாட்டு தலங்கள் அழிக்­கப்­பட்­டன. இந்த நாட்டில் இது­போன்ற வன்­மு­றைகள் இனி ஒரு­போதும் இடம்­பெ­றாது.

அண்­மையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டமை தொடர்பில் கருத்­துகள் முன் வைக்­கப்­ப­டு­கின்­றன. உண்­மையில் என்ன நடந்­தது? நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் மேற்கொள்ளப்பட்­டது. இந்த தாக்­குதல் இடம்பெற்­றதன் பின்னர் முஸ்லிம் மக்கள் மிகவும் மோச­மான வகையில் நடத்­தப்­பட்­டனர். தாக்­குதல் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் முஸ்லிம் மக்கள் என்ன கூறினார்கள். இந்த நாட்டில் அடிப்­ப­டை­வாத குழுக்கள் இயங்கிக் கொண்­டி­ருக்­கி­ன்றன. அது தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு தெரிவித்தோம். பொலி­ஸா­ருக்கு கூறினோம். ஆனால் உரிய நடவடிக்கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதன் பல­னையே நாம் அனுவிக்­கின்றோம் எனக் கூறி­னார்கள்.

எனவே அர­சாங்கம் என்ற வகையில் நாம் தீர்க்­க­மான முடி­வு­களை எடுத்­துள்ளோம். இவ்­வா­றான சம்­ப­வங்கள் இந்த நாட்டில் இடம்பெறுவ­தற்கு ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது. அறுகம்பை தாக்­குதல் இடம்­பெ­ற­வுள்­ள­தாக தகவல் கிடைத்­தது. இரவு பகல் பாராது நாம் அதற்­காக முழு­மூச்­சாக செயற்­பட்டோம். அறு­வரை கைது செய்தோம். நாட்டின் தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவே நாம் அதனைச் செய்தோம்.

அதே­போன்றே முஸ்லிம் இளை­ஞ­ரையும் கைது செய்தோம். அசம்பாவிதம் இடம்பெறு­வ­தற்கு முன்னர் உரிய பாது­காப்பு நடவடிக்கை எடுக்கவே அரசாங்கம் உள்ளது. அசம்பாவிதம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் செயற்படுவதற்கு அரசாங்கம் ஒன்று தேவையில்லை அல்லவா? அசம்பாவிதம் இடம்பெறுவதற்கு முன்னர் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இது முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கைது அல்ல. நாட்டில் அமைதியை நிலைநாட்டவே அதனை செய்தோம் என்றார்.

Vidivelli

No comments:

Post a Comment