நீதிச்சேவை ஆணைக்குழு வெற்றிடமாகவுள்ள 10 காதி பிரதேச பிரிவுகளுக்குத் தகுதியுள்ள புதிய காதி நீதவான்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இதன்படி, பதுளை, மாத்தளை, உடத்தலவின்ன (உட, மெத, பாத்த தும்பறை),பேருவளை, மாவனல்ல, யாழ்ப்பாணம், கொழும்பு தெற்கு, புத்தளம், காத்தான்குடி, சம்மாந்துறை ஆகிய காதி நீதிவான்கள் பிரிவுகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
40 வயதுக்கு மேற்பட்ட திருமணமான இஸ்லாமிய சமயம் தொடர்பான அறிவைக் கொண்ட முஸ்லிம் ஆணாகவும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றில் பட்டம்பெற்ற அல்லது முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து மெளலவி சான்றிதழ் பெற்ற அல்லது கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அல் ஆலிம் சான்றிதழ் பெற்ற அல்லது சட்டத்தரணி அல்லது அதற்குச் சமனான தகைமையுள்ளவர்கள் மற்றும் உத்தியோகத்தர் தரத்திலிருந்து ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களும் விண்ணப்பிக்கலாம். தற்சமயம் பொதுச் சேவையில் நிரந்தரமாகப் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க முடியாது. விண்ணப்பதாரர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பில் சிறந்த அறிவைக் கொண்டிருத்தல் வேண்டும்.
காதி நீதிவான் குறித்த நிர்வாக எல்லைப் பகுதியில் நிரந்தரமாக வதிபவராக இருப்பது கட்டாயமானதாகும்.
மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 7500 உடன் உதவியாளர் சேவை மற்றும் எழுதுகருவிகளுடன் அஞ்சல் செலவுகளுக்காக மேலும் 6250 ரூபாவும் வழங்கப்படும். இது குறித்த மேலதிக தகவல்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் கடந்த மார்ச் 28 இல் வெளிவந்த அரச வர்த்தமானப் பத்திரிகையில் பார்வையிடலாம். விண்ணப்ப படிவத்தை சிரேஷ்ட உதவிச் செயலாளர், நீதிச்சேவை ஆணைக்குழு, நீதிச்சேவை ஆணைக்குழு செயலகம், த.பெ. இல 573, கொழும்பு 12 எனும் முகவரிக்கு ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
Vidivelli
No comments:
Post a Comment