போலி அழைப்பிதழ் ! தவறாக வழி நடத்த முயற்சி - News View

About Us

About Us

Breaking

Friday, April 18, 2025

போலி அழைப்பிதழ் ! தவறாக வழி நடத்த முயற்சி

“ஶ்ரீ தலதா வழிபாடு “ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழில் “ஶ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தருமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஶ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வுக்கு இந்த வகையான சிறப்பு அழைப்பிதழ் யாருக்கும் வழங்கப்படவில்லை.

மேலும், இந்த போலி ஆவணத்தின் அடிப்படையில் சிறி தலதா வழிபாட்டுக்காக மிக முக்கிய விருந்தினர் (VIP) வரிசை அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதுடன், அதில் எந்த உண்மையும் இல்லை.

No comments:

Post a Comment