பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், இன்று (01) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த 27ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் முதல் 2 வழக்குகளுக்காக பிணை வழங்கப்பட்டதுடன், மற்றுமொரு வழக்கிற்காக இன்று வரையில் விளக்கமறியல் உத்தரவும் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment