தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு : ஏப்ரல் 4 முதல் 30ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 3, 2025

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு : ஏப்ரல் 4 முதல் 30ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்பு

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜெயசுந்த இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி திகதி எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரசுப் பாடசாலையிலோ அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலையிலோ தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மட்டுமே தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைக்கான விண்ணப்பம் தொடர்பான வழிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.

மேலும், விசேட தேவைகள் உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகள் அறிவுறுத்தல் தாளில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொலைபேசி எண்கள்
011 2784537, 011 2786616, 011 2784208 011 2786200, 011 2784201

மின்னஞ்சல் முகவரி

அவசர எண்
1911

தொலைநகல் எண்
011 2784422

No comments:

Post a Comment