பேஸ்புக் (Facebook) சமூக வலைத்தளம் அதில் பதிவிடப்பட்டுள்ள Live வீடியோக்களை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
பேஸ்புக் அதன் சேமித்து வைத்ல் கொள்கையில் மாற்றங்களைச் செய்து வருவதாகவும் அதற்கமைய இந்நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் Meta நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக் பக்கம் (page) அல்லது தனிப்பட்ட கணக்குகளில் (profile) பதிவிடப்படும் நேரடி (Live) வீடியோக்கள் 30 நாட்களுக்கு மாத்திரம் சேமிப்பில் வைக்கப்படும் எனவும் இக்காலப் பகுதியில் அதனை பார்வையிடுதல், அழித்தல் அல்லது தரவிறக்கம் செய்தல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்ளலாம் எனவும் அதன் பின்னர் அவை தானாகவே அழிக்கப்படும் எனவும் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பதவிட்ட லைவ் வீடியோக்கலை 30 நாட்களுக்குப் பின்னர், அணுக முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் ஒரு அங்கமாக, பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதிக்கு முன் பதிவிடப்பட்ட அனைத்து Facebook Live வீடியோக்களும் அந்தந்த பக்கங்கள் மற்றும் தனிப்பட்ட கணக்குகளில் இருந்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும், இது தொடர்பில் பயனர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், அவ்வாறு அறிவிப்பு விடுக்கப்பட்ட தினத்திலிருந்து 90 நாட்களுக்குள் அவற்றை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுவதாக பேஸ்புக் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஆயினும் மேலும் கால அவகாசம் அவசியப்படும் நிலையில், அதனை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்க முடியும் எனவும், குறித்த கோரிக்கையை ஒரேயொரு முறை விடுக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இன்றையதினம் ஒருவருக்கு அவ்வாறான அறிவிப்பு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்படும் நிலையில், அவருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 03 வரை 90 நாட்களுக்கு அதற்கான முதல் கட்ட கால அவகாசம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. (அவ்வாறான அறிவிப்பு கீழே காண்பிக்கப்பட்டுள்ளது)
இவ்வாறான வீடியோக்கள் நீண்டவையாகவும் அவற்றை சேமித்து வைக்க பாரிய சேமிப்பு இடங்கள் அவசியம் என்பதால் பேஸ்புக் நிறுவனம் இத்தீர்மானத்திற்கு வந்திருப்பதாக தெரிய வருகிறது.
No comments:
Post a Comment