தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 12, 2025

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இன்று நள்ளரவு 12.00 மணியுடன் நிறைவடையவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி, தபாலில் ஏற்படக்கூடிய கால தாமதங்களையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் கவனத்திற்கொண்டு மார்ச் மாதம் 17ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை நீடிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment