கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி குறித்து தகவல் வழங்குபவருக்கான சன்மானத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணை கைது செய்வதற்கான சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ. 12 இலட்சம் பணப்பரிசு வழங்கப்படுமென பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 19 ஆம் திகதி, புதுக்கடையில் உள்ள புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ பாதாள குழு உறுப்பினர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தாக்குதலுக்கு உதவியதுடன் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் இஷாரா செவ்வந்தி என்ற 25 வயது பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து அவர் இருக்கும் இடம் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இல்லாததால், சந்தேக நபரைக் கைது செய்வதற்கு சரியான தகவல்களை வழங்குபவர்களுக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்க பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது.
தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி இலக்கங்கள்
கொழும்பு குற்றப்பிரிவு பணிப்பாளர் - 071 8591727
கொழும்பு குற்றப்பிரிவு OIC - 071 8591735
தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment