ஜெரோம் பெனாண்டோவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 5, 2025

ஜெரோம் பெனாண்டோவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

போதகர் ஜெரோம் பெனாண்டோவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கு இடையே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் பிரசங்கம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த ஜெரோம் பெனாண்டோவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வெளிநாட்டு மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு பயணத் தடை தடையாக இருப்பதால் பயணத் தடையை நீக்க உத்தரவிடக் கோரி அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment