கைதான ‘டெய்சி ஆச்சி’ பிணையில் விடுதலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 5, 2025

கைதான ‘டெய்சி ஆச்சி’ பிணையில் விடுதலை

யோஷித ராஜபக்ஷவின் தாய்வழி பாட்டியான “டெய்சி ஆச்சி” என்றும் அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட் இன்று (05) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதன்படி, கடுவெல நீதவான் நீதிமன்றத்தால் தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 2 சொந்தப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று (05) காலை வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்த இவர் கைது செய்யப்பட்டார்

யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான இவர், பணத் தூய்தாக்கம் தொடர்பில் இன்று CID இல் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment