ஒப்பந்தத்துடன் ஒன்றிணைந்த பிள்ளையான் - கருணா - News View

About Us

About Us

Breaking

Saturday, March 22, 2025

ஒப்பந்தத்துடன் ஒன்றிணைந்த பிள்ளையான் - கருணா

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் இடையிலான கனவான் ஒப்பந்தம் இன்று (22) மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கைசாத்திடப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு இடையில் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் நாகலிங்கம் திரவியம், பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் தெய்வநாயகம் செந்தூரன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment