பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் : சந்தேகநபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 14, 2025

பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் : சந்தேகநபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு

அநுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேகநபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை கல்னேவ பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வைத்தியரின் தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டறியும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (13) அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment