நாடளாவிய ரீதியிலான கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று (14) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
பெண் கிராம சேவை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியே அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இரவு நேரங்களில் இடம்பெறுகின்ற விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளுடன் தொடர்புடைய கடமைகளிலிருந்து விலகுவதாகவும் அவர்கள் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் இல்லாத பகுதிகளில் காணப்படும் அலுவலகங்களை மூடி விடுதல் மற்றும் ஒருவரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட இடத்திலிருந்து அலுவலக நடவடிக்கைகளை மேற்கொள்தல் மற்றும் நண்பகல் 1 மணி வரை மாத்திரமே அலுவலகங்களை திறந்து சேவைகளை மேற்கொள்வது போன்ற விடயங்களை முன்வைத்தே அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
மேற்படி கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கும் வரை தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment