இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியாக பாடசாலை அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் U19 DIII - Tier B Limited Over Tournament 2024/25 முதல் காலிறுதிப் போட்டியில் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய U19 அணி மாகாணம் தாண்டி சாதனை புரிந்துள்ளதுடன், 70 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
மொனராகல, பெல்வத்தை சீனி ஆலை (En Ranjan Wijeraine Sports Complex) மைதானத்தில் இன்று (05) இடம்பெற்ற மொனராகலை நிசங்க மத்திய மகா வித்தியாலய அணியுடனான போட்டியில் மட்டு. மத்தி மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அணி இவ்வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நிசங்க மத்திய மகா வித்தியாலய அணி களத்தடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது. ஆகவே ஹிதாயா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில், R. பாயிஸ் அஹமட் 96 பந்துகளை எதிர்கொண்டு நான்கு 4 ஓட்டங்கள் ஒரு 6 அடங்களாக 52 ஓட்டங்களையும் FM.முன்ஷிப் 33 பந்துகளை எதிர்கொண்டு இரு 6 ஓட்டங்கள், இரு 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 38 ஓட்டங்களையும் FM.பவாஸ் 71 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து 4 ஓட்டங்கள் அடங்களாக 32 ஓட்டங்களையும் MM.றிஸ்னி 17 பந்துகளை எதிர்கொண்டு தலா இரு 6, 4 ஓட்டங்கள் அடங்களாக 25 ஓட்டங்களையும் AH.ஹஸீப் 27 பந்துகளுக்கு ஒரு 4 ஓட்டங்களுடன் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் மொனராகலை நிசங்க மத்திய மகா வித்தியாலய அணி சார்பாக RMJ.நெத்மின 44 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களையும் JMSH.ஜெயசிங்க 40 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் TMRK.திஸாநாயக 32 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களையும் RKUE.தர்மசிறி மற்றும் KPSL.காரியவசம் ஆகியோர் தலா 1 விக்கட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.
202 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மொனராகலை நிசங்க மத்திய மகா வித்தியாலய அணி 45.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள 70 மேலதிக ஓட்டங்களால் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய U19 அணி அபார வெற்றியைப் பதிவு செய்து கொண்டது.
மொனராகலை நிசங்க மத்திய மகா வித்தியாலய அணியின் முன்வரிசை வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழக்க அணியின் தலைவரான JMSH. ஜெயசிங்க 60 பந்துகளை எதிர்கொண்டு ஒன்பது 4 ஓட்டங்கள் அடங்களாக 52 ஓட்டங்களைப் பெற்று MM.றிஸ்னியின் அபார பந்து வீச்சில் ஆட்டமிழக்க KPSL.காரியவசம் 59 பந்துகளை எதிர்கொண்டு ஒரு 4 ஓட்டங்களுடன் 19 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள பின் வரிசை வீரர்களும் எதிர்பார்த்த ஆட்டத்தை வழங்க முடியாமல் ஏமாற்றத்தை அளித்தனர்.
மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலய அணி சார்பாக பந்து வீச்சில் அசத்திய MM.றிஸ்னி 9 ஓவர்கள் பந்து வீசி இரு ஓட்டமற்ற ஓவர்கள் அடங்களாக 21 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 6 விக்கட்டுக்களை வீழ்த்தி எதிரணி வீரர்களை துவம்சம் செய்திருந்தார். அத்துடன், FM. முன்ஷிப் மற்றும் MM.சாகிப் ஹஸன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கட்டுக்களையும் கைப்பற்றி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றதுடன், தேசிய ரீதியில் காலிறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றியைப்பதிவு செய்ய சிறந்த வழிகாட்டலை வழங்கி வரும் பாடசாலையின் முதல்வர் AJ.மர்சூக் (SLEAS), போட்டிகள் அனைத்துக்கும் பூரண ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் வழங்கி வரும் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ரினோஸ் மற்றும் பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்த கிரிக்கெட் அணியினருக்கு பயிற்சியளித்து தொடர் வெற்றிக்கு இட்டுச்சென்று கொண்டிருக்கும் பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் WMM.சிபான் மற்றும் உதவி, பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அது மட்டுமின்றி நிதியுதவி, உடலுதவி வழங்கிய எமது பாடசாலையின் பழைய மாணவர்கள், சமூக நல் உள்ளம் கொண்ட சேவையாளர்கள் ஆர்வலர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவினர் அனைவருக்கும் பாடசாலை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
𝙃𝙈𝙑 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙐𝙣𝙞𝙩
No comments:
Post a Comment