பரீட்சார்த்திகளுக்காக நாளை ஆட்பதிவு திணைக்களம் திறப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, March 14, 2025

பரீட்சார்த்திகளுக்காக நாளை ஆட்பதிவு திணைக்களம் திறப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்தும் கடிதத்தை வெளியிடுவதற்காக நாளை (15) ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உள்ளிட்ட மாகாண அலுவலகங்கள் காலை 8.30 மணியிலிருந்து நண்பகல் 12.30 மணி வரை திறந்திருக்குமென்று பதில் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் எம். எஸ்.பீ. சூரியபெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று (13) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்தியாக இருந்தால், அவர்களுக்காக தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதிப்படுத்துவதற்கான கடிதத்தை வெளியிடுவதற்காக மாத்திரம் நாளை சனிக்கிழமை ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் திறந்திருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கோரிக்கை முன்வைக்காத இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை விண்ணப்பதாரிகள், பாடசாலை அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரினூடாக உறுதிப்படுத்தப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட கோரிக்கை பத்திரத்தை எடுத்து வர வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment