மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி : நீண்ட நேர பரிசீலனைக்கு பின்னர் உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 19, 2025

மஹிந்தவின் அடிப்படை உரிமை மனு தள்ளுபடி : நீண்ட நேர பரிசீலனைக்கு பின்னர் உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

முறையான மதிப்பீடின்றி தமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 ஆக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவை சவாலுக்கு உட்படுத்தியே இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment