அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமை செய்யும் இளம் பெண் வைத்தியர் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக வேண்டி 5 பொலிஸ் குழுக்கள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது என வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திலின ஹெவா புத்திரன தெரிவித்தார்.
குறித்த பெண் வைத்தியர் கடமையினை முடித்து விட்டு வைத்தியர் விடுதிக்கு சென்று கொண்டிருக்கும்போது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (10) நேற்றிரவு 6.30 மணிக்கும் 7.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதுடன், சந்தேகநபர் இராணுவத்திலிருந்து தப்பியோடிய சிப்பாய் ஒருவர் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment