தரம் 1 - 6 வரையான பாடத் திட்டத்தில் முழு மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 5, 2025

தரம் 1 - 6 வரையான பாடத் திட்டத்தில் முழு மாற்றம்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்புகளின் பாடத்திட்டங்கள் மட்டுமே முழு மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் எனவும் 10 ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் ஓரளவு மாற்றம் இருக்கும் எனவும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண தெரிவித்தார்.

அத்துடன், புதிய சீர்திருத்தங்களின் கீழ், ஏனைய வகுப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மூன்று வகுப்புகளுக்கான புதிய கற்றல் கற்பித்தல் செயல்முறை 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வகுப்பறைகளில் செயற்படுத்தப்படும் என விதானபத்திரண தெரிவித்துள்ளார்.

அதற்காக அமைச்சரவை பத்திரங்களுக்கான தகவல்களை வழங்குதல், ஆசிரியர் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், தொகுதிகளை தயாரித்தல், புத்தகங்களை தயாரித்தல் போன்ற சீர்திருத்த செயல்முறைகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும், தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள் இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு அதிகபட்ச அர்ப்பணிப்பை வழங்கியுள்ளதாகவும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment