இலங்கையில் இடம்பெறவுள்ள 2025 உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று (20) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று (20) நண்பகல் 12.00 மணிக்கு நிறைவடைந்தததைத் தொடர்ந்து இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நேரம் கடந்ததைத் தொடர்ந்து எந்தவித வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து பி.ப. 1.30 மணி வரை ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான நேரம் வழங்கப்பட்டது.
இலங்கையிலுள்ள 336 உள்ளூராட்சி சபைளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமானது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் (19) முடிவடைந்தது.
வேட்புமனு தாக்கல் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படுமென ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, தற்போது அதற்கான திகதி மே 06 என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment