இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் : ஆழ்கடலின் கண்காணிப்பு முன்னெடுப்புக்கள் குறித்தும் ஆராய்வு - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 26, 2025

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் : ஆழ்கடலின் கண்காணிப்பு முன்னெடுப்புக்கள் குறித்தும் ஆராய்வு

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

கடற்படையின் உயர் அதிகாரிகளுடனான இந்தச் சந்திப்பில் இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த கடல் பரப்பில் மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புகள், கடல் மார்க்கமாக நடைபெறும் ஆயுத விற்பனை மற்றும் போதைப் பொருள் விற்பனை சுற்றிவளைப்பு உள்ளிட்ட ஆழ்கடலில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு முன்னெடுப்புக்கள் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, கடற்படை தளபதி வயிஸ் அட்மிரல் கஞ்சன பானகொட உள்ளிட்டவர்களும் கடற்படையின் உயர் அதிகாரிகள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment