கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த் தாங்கி : அதிர்ச்சியில் மீனவர்கள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 26, 2025

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த் தாங்கி : அதிர்ச்சியில் மீனவர்கள்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் பாரிய தண்ணீர்த் தாங்கியொன்று இன்று (26) மாலை கரையொதுங்கியுள்ளது.

கடலில் நிலவும் கடும் காற்றால் குறித்த பாரிய தண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாமெனத் தெரிவிக்கப்படும் அதேவேளை, அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பாரிய தண்ணீர்த் தாங்கி இரும்பு உலோகத்தில் செய்யப்பட்டு அதன் மேல் பைரினால் வார்க்கப்பட்டு இளம் பச்சைக் வர்ண கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாக இப்பொருள் பெரியளவில் காணப்படுகின்றது.

இப்பொருளின் மேற்பகுதியில் டயர்கள் காணப்படுகின்றன. இது பெரிய கப்பல்களின் ஒரு பாகமாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவிப்பதோடு, இவ்வாறு மர்மப் பொருள் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் கடற்படைக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகாண கடற்கரைப் பகுதிகளில் மர்மான பொருட்கள் மற்றும் ஆளில்லாத படகுகள், டொல்பீன்கள் போன்றவை கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கரையொதுங்கிய மிதவையை இராணுவம், கடற்படை, பொதுமக்கள் எனப்பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கடற்படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

No comments:

Post a Comment