விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Saturday, February 15, 2025

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வைத்தியசாலையில் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில், காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இன்று (15) கலந்துகொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, வாகனம் பரந்தன் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ். விசேட நிருபர்

No comments:

Post a Comment