மஹானாம, வெத்திமுனி, ஸ்ரீயானி அங்கம் வகிக்கும் தேசிய விளையாட்டு சபை நியமனம் - News View

About Us

About Us

Breaking

Friday, February 14, 2025

மஹானாம, வெத்திமுனி, ஸ்ரீயானி அங்கம் வகிக்கும் தேசிய விளையாட்டு சபை நியமனம்

இலங்கையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிர்வாகித்தல் தொடர்பான விடயங்களில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன் தேசிய விளையாட்டு சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டு 25ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் விதிகளின்படி, புதிய தேசிய விளையாட்டு சபைக்கான நியமனங்கள் இன்று (14) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றன. 

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன

ரக்பி வீரரும் கூடைப்பந்து வீரருமான பிரியந்த ஏகநாயக்க, தேசிய விளையாட்டு சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவர் இலங்கை ரக்பி அணியின் தலைவராகவும், இலங்கை மற்றும் ஆசிய ரக்பி சங்கத்தின் தலைவராகவும் மற்றும் நியூசிலாந்து மற்றும் வேல்ஸ் ரக்பி கழகங்களிலும் விளையாடியுள்ளார்.

தேசிய விளையாட்டு சபையின் ஏனைய உறுப்பினர்களையும் அமைச்சர் இதன்போது நியமித்துள்ளார்.

அதன் உறுப்பினர்கள் பின்வருமாறு,
சமந்தா நாணயக்கார
ருக்மன் வேகடபொல
சிதத் வெத்தமுனி
சானக ஜயமஹ
ரொஹான் அபேகோன்
நிரோஷன் விஜேகோன்
முராத் இஸ்மைல்
ரொஷான் மஹநாம
சீ. ரத்னமுதலி
ஸ்ரீயானி குலவன்ச
மலிக் ஜே. பெனாண்டோ
ஷானித பெனாண்டோ

இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவும் கலந்து கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment