கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (20) நடைபெற்றது.
கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உதித் லியனகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரின் பங்கேற்புடன் இக்கலந்துரையாடல் இன்று (20) இடம்பெற்றது.
இதன்போது, முன்னெடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நீதவான் தனுஜா லக்மாலி பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
பிரதான் நீதவான் நீதிமன்றத்திற்குச் செல்லும் பிரதான வாயிலுக்கு அருகில் நிறுவப்படவுள்ள சோதனைச் சாவடி குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்றையதினம் (19) கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றினுள் சந்தேகநபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நீதிமன்ற கட்டமைப்புக்குள் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பில் மீளாய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள் : சுலோச்சனா கமகே
No comments:
Post a Comment