சம்பள உயர்வுக்கு பட்ஜெட்டில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கத் திட்டம் : வாழ்க்கைச் செலவைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 4, 2025

சம்பள உயர்வுக்கு பட்ஜெட்டில் 90 பில்லியன் ரூபா ஒதுக்கத் திட்டம் : வாழ்க்கைச் செலவைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்காக எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் ரூ. 90 பில்லியன் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரச சேவையில் பல மாற்றங்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும், அதற்காக பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய வாழ்க்கைச் செலவைக் கவனத்திற் கொண்டு அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை கணிசமான அளவு அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவரும் நிலையில் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment