அதானியின் மின் திட்டத்தை பரிசீலிப்பதற்கு விசேட குழு ! அமைச்சரவை பத்திரம் இன்று - News View

About Us

About Us

Breaking

Sunday, January 5, 2025

அதானியின் மின் திட்டத்தை பரிசீலிப்பதற்கு விசேட குழு ! அமைச்சரவை பத்திரம் இன்று

இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்திய அதானி நிறுவனத்தின் மின்சார உற்பத்தி திட்டங்களை பரிசீலிப்பதற்கு, குழுவொன்றை நியமிக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் தொடர்பிலேயே இந்த யோசனை இன்றைய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மன்னார், பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களால் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது. 

இதற்காக, அப்போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீள் பரிசீலனை செய்வதற்காக மேற்படி குழு நியமிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். 

இத் திட்டங்கள் தொடர்பில் கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்கள், இது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment