(எம்.வை.எம்.சியாம்)
நாட்டில் நாளொன்றுக்கு இரண்டரை இலட்சம் லீட்டர் சட்டவிரோத பணம் பயன்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இந்த சட்டவிரோத மதுபானத்தை அருந்தி பழகியவர்கள் தமது வருமானத்தையும் இழந்தள்ளனர். எனவே நாம் சட்டவிரோத தரமற்ற மதுபானத்தை தடுக்கும் திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம். எதிர்காலத்தில் நாட்டு மக்களுக்கான அறிவியல் தரத்துடனான மதுபானத்தை குறைந்த விலையில் எம்மால் வழங்க முடியும். எனினும் இதனை வைத்து நாம் மதுபானத்தை ஊக்குவிக்கவில்லை என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
செவனகல சீனி உற்பத்தி கைத்தொழிற்சாலையை பார்வையிட அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அங்கு கள விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கைத்தொழிற்சாலையில் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், ஊழியர்கள், விவசாயிகள் சந்தித்தும் அமைச்சர் இதன்போது கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், இலங்கை மக்களின் தேவைகளில் 11 வீதத்தை நாம் தற்போது உற்பத்தி செய்து வருகிறோம். 89 வீதமானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 11 வீதமாக சந்தையில் உள்ள சிவப்பு சீனிக்கான பங்கை எதிர்வரும் சில வருடங்களில் 25 வீதமாக அதிகரிக்க முடியும்.
நாட்டின் சீனி தேவை பூர்த்தி செய்வதற்கு மிக விரைவாக உற்பத்தி பொருளாதாரத்துக்கு நாம் செல்ல வேண்டும். சீனி உற்பத்தியில் இருந்து கிடைக்கப் பெறும் மற்றுமொரு உற்பத்தி எதனோல் ஆகும்.
கடந்த காலங்களில் மது உற்பத்திக்காக சோளத்தை பயன்படுத்தினர். இருப்பினும் தரம் குறைந்த சோளத்தை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்து மக்களுக்கு தீங்கும் விளைவிக்கும் வகையில் மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
சாதாரணமாக கரும்பு உற்பத்தியிலிருந்து ஒரு லீட்டர் எதனோல் தயாரிக்கும்போது ஒரு லீற்றர் 800 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. சோளத்தின் மூன்றாம் தரம் சோளத்தினால் தயாரிக்கப்படும்போது ஒரு லீட்டர் 173 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும்.
173 ரூபாவுக்கு ஒரு லீட்டர் எதனோல் தயாரிக்கப்படுகிறது. ஒரு போத்தல் மதுபானத்தை 3800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மது அருந்துபவர்கள் அநீதிக்கு உள்ளாகின்றனர்.
பியர் உற்பத்திக்கு அரிசி பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் அரிசி உற்பத்தி இல்லை. சோளம் உற்பத்தி இல்லை. பியர்களுக்கு குறைந்த அளவில் செலவு செய்வதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கரும்பிலிருந்து எதனோல் மாத்திரமே தயாரிக்க முடியும். வேறு எதனையும் தயாரிக்க முடியாது. உப பொருட்களில் எதனோல் மாத்திரமே தயாரிக்க முடியும். குறிப்பாக சோளத்திலிருந்து எதனோல் தயாரிக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
நாட்டில் தற்போது நாளொன்றுக்கு இரண்டரை இலட்சம் லீட்டர் சட்டவிரோத மதுபானம் பயன்படுத்தப்படுகிறது. தரமற்ற மதுபானங்களே பயன்படுத்தப்படுகிறது.
சீனியின் தயாரிப்பான எதனோல் தயாரிக்க முடியும் என நாம் எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களுக்கான அறிவியல் தரத்துடனான மதுபானத்தை குறைந்த விலையில் தரத்துடன் வழங்க முடியும்.
எனினும் இதனை வைத்து நாம் மதுபானத்தை ஊக்குவிக்கவில்லை. ஏற்கனவே இந்த சட்டவிரோத மதுபானத்தை அருந்தி பழகியவர்கள் தமது வருமானத்தையும் இழந்தள்ளனர். எனவே அது தொடர்பில் வேலைத்திட்டத்தை தயாரிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment