கோப் குழு தலைவராக வைத்திய கலாநிதி நிஷாந்த சமரவீர - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 15, 2025

கோப் குழு தலைவராக வைத்திய கலாநிதி நிஷாந்த சமரவீர

கோப் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி நிஷாந்த சமரவீர ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முதன்முறையாக அண்மையில் (09) பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி நிஷாந்த சமரவீரவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ வழிமொழிந்தார்.

தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் உரையாற்றிய கோப் குழுவின் புதிய தலைவர், குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், வழங்கப்பட்ட பொறுப்பை மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாகவும், எதிர்காலத்தில் பக்கச்சார்பின்றி செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment